Sunday, April 26, 2009

சீமை ஆலமரம்


சீமை ஆலமரம் (Ficus elastica) அல்லது சீமை ஆல் வடகிழக்கு இந்தியா, இந்தோனேசியாவின் சுமாத்திரா , ஜாவா போன்ற பகுதிகள் ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது. பெரிய மரமான இது, ஃபைக்கஸ் தாவரச் சாதியில், ஆலமர வகையைச் சார்ந்தது. பொதுவாக 30-40 மீட்டர் உயரம் வரையும், மிக அரிதாக 60 மீட்டர் வரையும் கூட வளரக்கூடிய இதன் அடிமரம் 2 மீட்டர் வரை பருக்கக்கூடியது. ஒழுங்கற்ற அடிமரத்தைக் கொண்ட இதில் விழுதுகள் உண்டாகி மரத்தை நிலத்தில் உறுதியாக வைத்திருப்பதுடன், பாரமான இதன் கிளைகளையும் தாங்குகின்றது. 10-35 சமீ நீளமும், 5-15 சமீ அகலமும் கொண்ட நீள்வட்ட வடிவில் அமைந்த இலைகள் மினுக்கம் கொண்டவை. இளம் தாவரத்தின் இலைகளே பெரிதாகக் காணப்படும். சமயத்தில் 45 சமீ நீளம் வரை கூட வளர்வதுண்டு. முதிர்ந்த மரத்தின் இலைகள் ஒப்பீட்டளவில் சிறியவை. பொதுவாக 10 சமீ நீளம் கொண்டவை.

No comments:

Post a Comment