Monday, April 27, 2009

காகம்

காகம் என்பது பொதுவாக கரிய நிறம் கொண்ட பறவை ஆகும். இது பறவைகளில் கூடுதல் அறிவுத்திறன் பெற்றதாகக் கருதப்படுகிறது. இது மக்கள் வாழும் இடங்களில் அதிகமாக இருந்து கொண்டு அவர்கள் வெளியிடும் குப்பைகளையும் மற்ற வீண்பொருட்களையும் உண்டு வாழ்கிறது. இதன் காரணமாக சுற்றுபுறசூழல் பாதுகாப்பில் ஒரு பங்கு வகிக்கிறது.
இவற்றை மிக இலகுவாக பயிற்றுவிக்க முடியும். காகங்களை பழக்கி இலகுவாக சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால் இவற்றை செல்லபறவைகளாக வளர்ப்பது சில நாடுகளில் சட்டவிரோதமானதாகும் காகங்களில் ஆஸ்திரேலிய, வட அமெரிக்க, ஆபிரிக்க, ஐரோப்பிய, ஆசிய இனங்கள் பல உள்ளன. கரியன் காகம் , வீட்டுக்காகம் ஆகியன ஆசியக் காக இனங்களாகும்.

No comments:

Post a Comment