Thursday, May 7, 2009

மஞ்சள்

ஒரு மருத்துவ மூலிகையாகும். இது தென்னாசிய உணவு முறைகளில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சில உணவுப்பொருட்களில் நிறத்தைக் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது மஞ்சள்தூளில் இருக்கும் குர்குமின் curcumin என்ற ஒரு மூலக்கூறு, வயதான பரிசோதனைச்சாலை எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரோட்டீன் சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்மூளையில் அல்ஜைமர் உருவாக்கும் அழுக்குளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரோட்டீன்கள் ஒன்று சேரவிடாமல் நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது வயது முதிர்ந்த இந்தியர்களிடம் அல்ஜைமர் வியாதி மிக மிகக்குறைவான அளவில் இருப்பதை அடித்தளமாக வைத்துக்கொண்டு இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்தியாவில் மஞ்சள்தூள் கறிமசாலாவில் அதிகம் சேர்க்கப்படுவது அறிந்ததே.

Monday, May 4, 2009

குற்றாலம்

குற்றாலம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2368 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 41% ஆண்கள், 59% பெண்கள் ஆவார்கள். குற்றாலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குற்றாலம் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.