Sunday, October 11, 2009

சாதிக்காய்


குலக்காய், ஜாதிக்காய் அட்டம் , அட்டிகம் என பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்படும் சாதிக்காய், மனநல பாதிப்புக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. மைரிஸ்டிகா அஃபியனாலிஸ் அல்லது மைரிஸ்டிகா ஃப்ராக்ரன்ஸ் என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட சாதிக்காய், ஹோமியோபதி மருத்துவத்தில் நினைவுத்திறன் மங்குதல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சாதிக்காயிலிருந்து வீரியப்படுத்தி (பொடன்சி) தயாரிக்கப்பட்ட மருந்தின் பெயரே நக்ஸ்மாஸ்சாடா. இம்மருந்து, தோல்வி போன்ற எதிர்வினைகளால் உண்டாகும் அதிக மன வேதனையால் 'லிபோதைமியா' என்றழைக்கப்படும் மனநிலை பாதிப்புக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.அத்துடன், நினைவாற்றல் குறைபாடு மற்றும் கண்மணியில் செயல்படும் தசைகள் பாதிப்பினால் ஏற்படும் கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் நக்ஸ்மாஸ்சாடா செயல்படுவதாகவும் ஹோமியோபதி மருத்துவம் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment