
மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். இது இந்தியா, இலங்கை , தாய்லாந்து, மியான்மார் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையன. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோவில்களில் பூசையிலும் பயன்படுகிறது. பெண்களுக்கு பிடித்த மலர்களில் மல்லிகைக்குத்தான் முதலிடம். அதுவும் நம் மதுரை மல்லிக்கு உலகெங்கும் மவுசுதான். இந்தியாவின் மலர் ஏற்றுமதியில் மல்லிகை பூ இரண்டாம் இடத்தில் உள்ளது.மல்லிகையின் நறுமணத்தில் மயங்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். வெள்ளை நிறத்தில் பூத்துக் குலுங்கும் மல்லிகை மலர்கள் நறுமணத்திற்கும் தலையில் சூடுவதற்கும் மட்டுமின்றி மாபெரும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. மல்லிகைப் பூவை பெண்கள் சூடுவதால் அவர்களுக்கு அழகோடு பல மருத்துவப் பயன்களையும் கொடுக்கிறது

No comments:
Post a Comment