Sunday, October 11, 2009

வெந்தயம்


வெந்தயம் (தாவர இயல்:Trigonella foenum-graecum) என்பது Fabaceae குடும்ப ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
ஆசிய நாட்டினராலும், மத்திய தரைக்கடல் நாட்டினராலும் பெரிதும் விரும்பி உணவாகவும், மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படும். இதன் பிறப்பிடம் கிழக்கு ஐரோப்பாகவோ, எத்தியோப்பியாகவோ இருக்கலாம். ஆரம்பத்தில் மேலை நாட்டவருக்கு இதன் மணம் பிடிக்காமலிருந்தாலும் காலப்போக்கில் மூலிகையாக பயிரிட்டு வந்துள்ளனர். வெந்தயத்தின் துளிர் இலைகளை கீரைபோன்றும் முதிர்ச்சியடைந்த விதைகளை மசாலாப் பொருளாகவும் உபயோகிக்கிறோம்.
வெந்தயத்தை அப்படியே உபயோகிப்பதால் கசப்பாகவும், விநோத வாசனையும் உடையதாக இருப்பதால் தான் இதனை வறுத்துப் பொடித்துப் பயன்படுத்துகிறோம். இதன் கசப்பு ருசியும், பாகற்காய் கசப்பைப் போல் ஒருவித ருசியாக நாவுக்குப் பழகிவிடுகிறது. இந்தக் கசப்பு ருசிக்குக் காரணமான க்ளைக்கோசைட்ஸ் (clycosides) வெந்தயத்தில் தூக்கலாக இருக்கிறது. நல்ல பசி கிளப்பியாக இந்த கசப்பு ருசி இருப்பதோடு உணவு ஜீரணத்துக்கு அத்தியாவசியமாக பித்த நீரை தாராளமாக சுரக்கத் தூண்டிவிடுகிறது. அசைவ உணவுக்காரர்களுக்கு இது நன்மை கூட்டுகிறது.
வெந்தயத்தில் பாஸ்பேட்டுகளும், லிஸிதின், நியூக்லியோ, அல்புமின் நிறைந்து இருப்பதால் உடல் வளர்ப்பதோடு பசியின்மையைப் போக்குகிறது. அனிமியா என்னும் இரத்தசோகை அண்டாது. நிக்கெட்ஸ் நோய்க்கு பரிகாரமும், இதுவே நீரிழிவுக் காரர்களுக்கும் நல்லது.
தினமும் இரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை பொடித்தோ, முழுசாகவோ கொடுத்து வந்தால் ரத்தத்திலுள்ள கூடுதல் சர்க்கரை கட்டுப்படும். அல்லது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரை ம்ட்டும் வடிகட்டிக் குடிக்கலாம்.

1 comment: