Friday, October 16, 2009

கத்தரிக்காய்


கத்தரி சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். கத்தரி நைற்சேட் குடும்பத்தைச் சேர்ந்தது. தென்னிந்தியாவும் இலங்கையுமே இதன் தாயகப் பிரதேசங்களாகும். இது 40 முதல் 150 ச.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, மத்தியகாலத்தில் அராபியர்களால் மத்தியதரைக்கடர்ற் பகுதியில் அறிமுகமானது. இக்காயை தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ மசித்தோ உண்பார்கள்.

\கத்தரிக்காய் சமஸ்கிருத மொழியில் வட்டிங்கானா என்றழைக்கப்பட்டதிலிருந்து ஆங்கில மொழியில் ஓபர்ஜின் என்றும், அரபிக் மொழியில் அல்பகின்ஜன் என்றும், பேசியனில் படின்ஜன் என்றும், இத்தாலியில் மெலன்சானா என்றும் பலவிதமான பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இது கிறிஸ்துக்கு முன்பு 600 ஆம் நூற்றாண்டுகளிலேயே காணப்பட்டது. ஆங்கிலேயர்கள் இதை Eggplant என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து ஜரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கத்தரிக்காய் தற்பொழுது ஜரோப்பிய நாடுகளிலும் உற்பத்தியாக்கப்படுகின்றது. இது மரக்கறியாகப் பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது ஒரு பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது

No comments:

Post a Comment