Sunday, October 11, 2009

புதினா




கீரை வகைகளில் ஒன்றான புதினா மருத்துவ குணம் கொண்டது. உணவில் தொடர்ந்து புதினாவை சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தம் சுத்தமாகிறது. மேலும், வாய் துர்நாற்றம் அகலவும், ஜீரண சக்தி அதிகரிக்கவும், மலச்சிக்கல் நீங்கவும் புதினா பயன்படுகிறது. உடலின் தேவையற்ற சதைகளை குறைக்கவும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயு தொல்லை தீரவும் புதினாக் கீரை உதவுகிறது.
புதினா இலையின் சாற்றை தலைவலிக்கு மருந்தாகப் பூசலாம். இளைப்பு நோய், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் சக்தியும் புதினாவுக்கு உள்ளது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. புதினாவில் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் சத்து மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் உள்ளன. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன் படுவதால் புதினாவை வீட்டுத் தோட்டத்திலும் வளர்க்கலாம்

No comments:

Post a Comment