Sunday, October 11, 2009

கிளி

கிளி குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக்க் (அலகு) கொண்டன., அதாவது ஒவ்வொரு காலிலும், முன்பக்கம் இரண்டும், பின்பக்கம் இரண்டுமாக நான்கு விரல்கள் அமையப் பெற்றவை.
பழங்களும் கொட்டைகளும் கிளிகளின் முக்கிய உணவு. கிளிகள் மாந்தரின் பேச்சைக் கேட்டு அதைப்போலவே ஒலி எழுப்ப வல்லவை. பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். பேசும்கிளி வளர்த்தால், இருவர் உரையாடும்போது அதைக்கேட்டு அப்படியே அது மிமிக்ரி செய்யும். மூன்று நோயாளிகளையும் ஒரு பேசும் கிளியையும் வைத்துப் பேசப் பயிற்சி அளித்தால் போதும். எஞ்சிய நேரங்களில் கிளியே கொஞ்சி கொஞ்சிப் பேசி நோயாளிகளைப் பேச வைத்துவிடுமாம். டாக்டர் இரீன் பெப்ர்பர்க் என்பவர் பறக்கும் பறவைகளின் அறிவுத்திறமை, பேசுவதைப் புரிந்து கொள்ளும் தன்மை, செயல்படும் ஆற்றல் முதலியவற்றைப் பல ஆண்டுகள் ஆராய்ந்து இந்த உண்மைகளைக் கண்டுபிடித்தார். பரிசோதனையிலும் வெற்றி பெற்றார். வீட்டில் கிளி வளர்க்க ஆரம்பித்தால் குழந்தைகளும் பெரியவர்களும் மிகுந்த நலத்துடன் இருப்பார்கள். நடுத்தர வயதுக்காரர்கள், பெரிய பறவைக்கூண்டில் பல்வேறு வகையான கிளிகளை வளர்த்து வந்தால் குடும்பச் சூழ்நிலைகளில் உள்ள கடுமை, கோபம் முதலியன குறையுமாம். குருவி வகைகளும் இதே அளவு நன்மைகள் செய்கின்றன.
செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கிளியை வளர்த்து வந்தால் உடலும் மனமும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உறுதி

No comments:

Post a Comment