Sunday, October 11, 2009

பலாப்பழம்


பலாப்பழமாகும். சில இடங்களில் மட்டுமே இது முறையான விவசாய முறைகளின் படி முழுமையான தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மற்ற பழத்தோட்டங்களில் துணைப்பயிராகவோ அல்லது வீட்டுத்தோட்டங்களிலோ வளர்க்கப்படுகிறது. விந்தையாக, உலகின் சில இடங்களில் 'பழங்களின் அரசன்' என்று போற்றப்படும் பலா சில இடங்களில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் வீசப்படுகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 'சிலோன்' அல்லது 'சிங்கப்பூர்' பலா மிக விரைவில் பழம் தரக்கூடியதாகையால், 1949 இல் மிக பிரபலமடைந்தது. இந்தியாவில், சஹரன்பூர், கள்ளார் ஆகிய இடங்களிலுள்ள ஆராய்ச்சி நிலையங்கள் பல உயரிய பலா இரகங்களையும், பெயரிடப்படாத ஒரு கலப்பின இரகத்தையும் வெளியிட்டன. பலா சாதாரணமாக விதை மூலமே வளர்க்கப்படுகிறது. நீரிலோ, 10% ஜிப்பரெலிக் அமில கரைசலிலோ ஊர வைப்பதன் மூலம் விதைகள் விரைவாக முளைக்கும். விதைகளை நிலத்தில் நேரடியாக நடாமல், நாற்றங்காலிலும் நடலாம். ஆனால், நாற்றுகளை விரைவில் நடாவிட்டால் அவை நாற்றங்காலிலேயே வேர் பிடித்து விடும். பலவிதமான ஒட்டு முறைகளில் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டாலும், அவை விதைசெடிகள் அளவு பிரபலமடையவில்லை. எனினும், காற்றில் வேர் பிடிக்கச்செய்தல், சிறு தண்டுகளை வேர் பிடிக்கச்செய்தல் ஆகிய முறைகள் மூலம் பலாச்செடிகள் உருவாக்கப்படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் பலாச்செடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நன்கு வளர்ந்த பலா மரம் 21 மீ உயரம் வரையும், தடித்த தண்டும் கிளைகளும் கொண்டதாயும் இருக்கும். பலா இலைகள் பசுமையான நீள்கோள வடிவில் இருக்கும். எல்லா பாகங்களுமே பிசுபிசுவென்ற வெண்ணிறப் பால் கொண்டிருக்கும். பொதுவாக, பலாச்செடிகள் 3 - 7 வருடம் முதல் காய்க்கத் தொடங்கும்.

No comments:

Post a Comment