Monday, April 27, 2009

மழைக்காடு




மழைக்காடு அல்லது பொழில் (Rainforest) என்பது மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள் ஆகும். பொழிதல் என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழி பொழில் என்றாயிற்று. இச்சொல் இன்றைய அறிவியலில் மழைக்காடு என்று அழைக்கப்படுவதுதான். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 மில்லி மீட்டருக்கு , 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே இன்றைய அற்வியலில் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன.
உலகிலுள்ள விலங்குகள் , தாவரங்களில் மூன்றில் இரண்டு பங்கு அளவானவை மழைக்காடுகளிலேயே வாழுகின்றன. பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன.
பெருமளவில் தாவர இனங்கள் வளர்ந்தாலும் கூட, மழைக்காடுகளின் மண் மிகவும் தரக் குறைவானதாகும். பாக்டீரியா சார்ந்த உக்கல் விரைவாக நடைபெறுவது இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது. லட்டரைட்டாக்கம் (laterization) மூலம் இரும்பு மற்றும் அலுமினியம் ஆக்சைட்டுகளின் செறிவு அதிகரிப்பதனால் மண் பிரகாசமான சிவப்பு நிறம் கொண்டதாக மாறுகின்றது.
மழைக் காடுகளின் பெரும்பாலான பகுதிகளில், நிலமட்டத்தில் போதிய அளவு சூரிய ஒளி கிடைக்காமையினால் சிறுதாவர வளர்ச்சி குறைவாகவே காணப்படுகிறது. இது மனிதரும், விலங்குகளும் காட்டினூடாக இலகுவில் நடந்து செல்வதற்கு வசதியாக அமைகிறது.

No comments:

Post a Comment