Sunday, April 26, 2009

ஆப்பிள்

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆப்பிள் மரம் சிறிய மரமாகும் . சுமார் 5 - 12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன், பரந்த கிளைப்பகுதிகளும் கொண்டது. இதன் நீள்கோள் வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களுடையவை. ஆப்பிள் பழம் இல்லையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது.

இன்றைய ஆப்பிள்கள் முந்தைய ஆப்பிள்களை விட கூடுதல் இனிப்பானவை. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெரும்பாலும் சுவையான, புளிப்புக் குறைவான ஆப்பிள்களும், சிறுபான்மையினரால் உவர்ப்பு வகை ஆப்பிள்களும் விரும்பப்படுகின்றன. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில் , மிக இனிப்பான ஆப்பிள்கள் விரும்பப்படுகின்றன.
ஆப்பிள் சுவைமணம் பெரும்பாலும் தனிமனித விருப்பத்தையே பொருத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் வாஷிங்க்டன் மாநிலம் 'ரெட் டெலிசியஸ்' என்ற ஆப்பிள் இரகத்தை வளர்த்து புகழடைந்தது. ஆனால், அண்மையில் பல அமெரிக்கர்கள் ரெட் டெலிசியசை, பியுஜி, காலா போன்ற இரகங்களை விட குறைந்த தரமுள்ளதாகக் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment