Sunday, April 26, 2009

வாழை

வாழை மரம் உண்மையில் தாவர வகைப்படுத்தலின் படி ஒரு சிறுசெடியாகும் (herb). வாழையின் அறிவியல் பெயர் Musa spp. வாழை தென் கிழக்கு ஆசியாவில் தோன்றியது. வாழைமரம் 8 மீ உயரம் வரை வளரக் கூடியது. அதன் பெரிய இலைகள் 3 மீ நீளம் வரை இருக்கும். வாழைப்பழம் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் நீளமாக இருக்கும். வழைப்பழங்கள் வாழைக்குலையில் வரிசையாக கொத்துக்கொத்தாய் அமைந்திருக்கும். ஒவ்வொரு கொத்தும் 'சீப்பு' (ஆங்கிலத்தில் hand) என்றும், பல சீப்புகளைக் கொண்ட முழு வாழைக்கொத்து 'குலை' அல்லது 'தார்' (ஆங்கிலத்தில் stem) என்றும் அழைக்கப்படுகிறது.
2002 ஆம் ஆண்டு, 6,80,00,000 டன் வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு 1,20,00,000 டன் ஏற்றுமதி செய்யப்பட்டது. உலக வாழை உற்பத்தியில் இந்தியா (24%), ஈக்வடார் (9%), பிரேசில் (9%) ஆகிய நாடுகள் முன்னனி வகிக்கின்றன.

வாழைக்கன்றுகள் வாழைக்கிழங்கிலிருந்து உருவாக்கப்படுகின்றன. கிழங்கின் ஒவ்வொரு முளையும் சுற்றியுள்ள கிழங்குப்பகுதியுடன் துண்டாக்கப்பட்டு தனிக்கன்று வளர்க்கப்படுகிறது. நடுமுன், இம்முளைகள் வெந்நீரிலும், பூச்சி மருந்துகளிலும் நனைக்கப்பட்டு சுத்தமாக்கப் படுகின்றன. திசு வளர்ப்பு முறையிலும் இப்போது வாழைக்கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. சில விவசாயிகள் முழுக்கிழங்கையும் நடுகின்றனர். இது விரைவில் காய்க்கும் மரத்தைத் தரும். இருப்பினும் இவற்றில் கிழங்கு மூலம் பூச்சிகளும் நோய்களும் பரவும் வாய்ப்பு அதிகம்

No comments:

Post a Comment