Monday, April 27, 2009

மாமரம்

மாமரம்

மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. இவை 15 - 35 செ.மீ நீளமும், 6 - 16 செ.மீ அகலமும் கொண்டிருக்கும். கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இவை மிகச்சிறியதாக, 5 - 10 மி.மீ. நீளமுடைய இதழ்களையும், மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.
மாம்பழம் நீன்ட காம்புகளுடன் மரக்கிளைகளில் கொத்தாய் தொங்கும். பழங்கள் 10 - 25 செ.மீ நீளமும், 7 - 12 செ.மீ விட்டமும், 2.5 கிலோகிராம் வரை எடையும் உடையவை. காய்கள் பச்சையாகவும், பழங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும் காணப்படுகின்றன. பெருபாலும் இரகத்தைப் பொருத்து நிறம் மாறினாலும், சூரியன் படும் பாகங்கள் சிவப்பாகவும், மற்ற இடங்கள் மஞ்சளாகவும் இருக்கும். பழுத்த பழம் இனிய மணம் கொண்டிருக்கிறது. பழத்தின் நடுவில் கடின ஓடுடைய ஒற்றை விதை காணப்படும். இரகத்தைப் பொருத்து இந்த ஓடு நார்களுடனோ வழுவழுப்பாகவோ இருக்கும். விதை 4 - 7 செ.மீ நீளமும், 3 - 4 செ.மீ அகலமும், 1 செ.மீ தடிமனும் கொண்டு, ஒரு மெல்லிய விதை உறையுடன் இருக்கும்.

No comments:

Post a Comment