Saturday, April 25, 2009

இயற்கை

இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்னும் பொருள் கொண்டது. இதனால், இயல்பாக இருக்கும் உலகம், இயற்பியல் அண்டம் என்பன இயற்கையுள் அடங்குகின்றன. இயற்கை இயற்பியல் உலகின் தோற்றப்பாடுகளையும், உயிர்வாழ் இனங்களையும் குறிக்கிறது. மனிதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், மனித செயற்பாடுகளின் விளைவான பிறவும் இயற்கை என்பதற்குள் அடங்குவதில்லை. இயற்கை பொதுவாக இயல்பு கடந்தவற்றில் இருந்து வேறுபாடானது. இது, அணுவிலும் சிறிய துகள்கள் சார்ந்தனவாகவோ அல்லது நாள்மீன்பேரடைகளைப் போல் மிகப் பெரிய அளவு சார்ந்தனவாகவோ இருக்கலாம்.



No comments:

Post a Comment